Thursday, 18 December 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (19.12.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (19.12.2025)

1) காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதம் அனுமதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

2) மழை மற்றும் குளிர் காலங்களில் நத்தைகள் மூலமாக மூளை காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

3) 2026 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

4) மாசுகட்டுப்பாட்டு வாரிய அனுமதி இல்லாத பழைய வாகனங்கள் டெல்லியில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

5) தமிழகத்தில் டிசம்பர் 23 வரை மித மழைக்கு வாய்ப்புள்ளது.


Education & GK News

1) The bill allowing 100 percent foreign direct investment in the insurance sector has been passed in Parliament.

2) Doctors have warned that brain fever is likely to spread through snails during the rainy and cold seasons.

3) Guidelines for conducting Jallikattu in 2026 have been released.

4) Old vehicles without pollution control board approval have been banned from entering Delhi.

5) There is a possibility of moderate rainfall in Tamil Nadu until December 23.

Wednesday, 17 December 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (18.12.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (18.12.2025)

1) தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியாகிறது.

2) 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்குப் பதிலாக வளர்ந்த பாரத ஊரக வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

3) பிரதமருக்கு எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.

4) பயன்படாத 71 சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

5) தென்மாவட்டத்துக்குச் செல்லும் தொடர்வண்டிகளின் வேகத்தை அதிகப்படுத்தமுடிவு செய்யப்பட்டுள்ளது.




Education & GK News

1) The draft electoral roll will be released tomorrow in Tamil Nadu.

2) The Developed India Rural Employment and Livelihood Guarantee Bill was introduced in Parliament, replacing the 100-day employment scheme.

3) The Prime Minister was awarded Ethiopia's highest honour.

4) A bill to repeal 71 obsolete laws was passed in Parliament.

5) It has been decided to increase the speed of trains travelling to the southern districts.

Tuesday, 16 December 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 17.12.2025 (புதன்)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 17.12.2025 (புதன்)

1) வரலாறு காணாத உச்சமாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்சத்தைக் கடந்தது.

2) டிசம்பர் 24 முதல் ஜனவரி 4 வரை 12 நாட்களுக்குப் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

3) தமிழகம் முழுவதும் தொடர் காய்ச்சலைத் தொடர்ந்து தொடர் இருமல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

4) பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார்.

5) குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாளை வேலூர் வருகிறார்.

6) 100 நாள் வேலைத்திட்டத்திற்கு மாற்றாக புதிய  வேலைவாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

7) ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலியாகினர், 42 பேர் காயமடைந்தனர்.

8) நேட்டோவில் இணையும் திட்டத்தைக் கைவிட தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

9) மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.




Education & General Knowledge News – December 17, 2025 (Wednesday)

1) The price of one sovereign of gold crossed one lakh rupees, reaching an unprecedented high.

2) Half-yearly holidays have been announced for schools for 12 days, from December 24 to January 4.

3) The incidence of persistent cough is increasing across Tamil Nadu following a surge in fever cases.

4) Prime Minister Narendra Modi arrived in Jordan for a two-day official visit.

5) President Droupadi Murmu will be visiting Vellore tomorrow.

6) The Central Government is soon to introduce a new employment scheme in Parliament as an alternative to the 100-day work program.

7) In a horrific shooting at Bondi Beach in Sydney, Australia, 16 people were killed and 42 were injured.

8) Ukrainian President Zelenskyy has stated that he is ready to abandon the plan to join NATO.

9) The amount of water being released from the Mettur Dam has been increased.

Monday, 15 December 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 16.12.2025 (செவ்வாய்)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 16.12.2025 (செவ்வாய்)

1) தமிழகத்தில் டிசம்பர் 19 இல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது.

2) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் திருநெல்வேலிக்குச் சுற்றுப்பயணம் செல்கிறார். தமது சுற்றுப்பயணத்தின் போது பொருநை அருங்காட்சியகத்தைத் திறந்து வைக்கிறார்.

3) தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் கடந்த ஆறு ஆண்டுகளில் 18 சதவீதம் குறைந்துள்ளது.

4) பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு தபால் தலையைக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.

5) பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராகப் பீகாரைச் சேர்ந்த நிதின் நவீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

6) கனமழையால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 25 டன் மருந்துகளை இந்தியா விமானம் மூலம் அனுப்பியுள்ளது.

7) உலகக் கோப்பை ஸ்வாஷ் போட்டியை வென்று இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

8) தமிழகத்தில் டிசம்பர் 20 வரை மித மழைக்கு வாய்ப்புள்ளது.






Education & General Knowledge News – December 16, 2025 (Tuesday)

1) The draft electoral roll will be released in Tamil Nadu on December 19.

2) Tamil Nadu Chief Minister M.K. Stalin is touring Tirunelveli on December 20 and 21. During his tour, he will inaugurate the Porunai Museum.

3) The birth rate in Tamil Nadu has decreased by 18 percent in the last six years.

4) Vice President C.P. Radhakrishnan released a commemorative postage stamp of Perumpidugu Mutharaiyar.

5) Nitin Naveen from Bihar has been appointed as the National Working President of the BJP.

6) India has sent 25 tons of medicines to flood-affected Sri Lanka by air.

7) India has created a historic record by winning the Squash World Cup.

8) There is a possibility of moderate rainfall in Tamil Nadu until December 20.

Sunday, 14 December 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (15.12.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (15.12.2025)

1) 16 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன் வளர்ந்து வரும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய வங்கியின் (ஆர்பிஐ) பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

2) சென்னைக்குக் குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

3) 2027 இல் மேற்கொள்ளப்பட உள்ள மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு 11,718 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு செய்துள்ளது.

4) அதிகரித்து வரும் கைபேசி மற்றும் கணினி பயன்பாட்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

5) கேரள உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.

6) காற்று மாசுபாட்டால் டில்லியில் சுவாசக் கோளாறுகள் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

7) தங்கத்தின் விலை சவரனுக்கு 99000 ரூபாயை எட்டி புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

8) இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.



Education & GK News

1) The Reserve Bank of India's (RBI) economic survey report states that Tamil Nadu has secured the top position among the growing states with a 16 percent economic growth.

2) All the lakes supplying drinking water to Chennai have reached their full capacity.

3) The Central Government has allocated Rs. 11,718 crore for the population census to be conducted in 2027.

4) A study has revealed that increasing mobile phone and computer usage is leading to a rise in blood sugar levels.

5) The Congress-led alliance has achieved a resounding victory in the Kerala local body elections.

6) Respiratory problems in Delhi have increased by up to 30 percent due to air pollution.

7) The price of gold has reached a new high, touching Rs. 99,000 per sovereign.

8) The death toll from the heavy rains in Indonesia has crossed one thousand.

Saturday, 13 December 2025

அமெரிக்க விசாக்கள் குறித்து அறிவோமா?

அமெரிக்க விசாக்கள் குறித்து அறிவோமா?

அமெரிக்க விசா என்றால் நாம் பொதுவாக அறிந்தது ஹெச்1பி விசாதான்.

பல வகை அமெரிக்க விசாக்கள் இருக்கின்றன.

பி1, பி2 விசா என்பது ‘வந்து செல்வோருக்கான’ விசா (Visitors Visa) எனப்படுகிறது.

எப்1 விசா என்பது மாணவர்களுக்கான விசா (Students Visa) எனப்படுகிறது.

எல்1 விசாஎன்பது நிறுவனங்களுக்கான ஊழியர் பரிமாற்ற விசா (Intra Transfer Visa) எனப்படுகிறது.

ஓ1 விசா என்பது அசாதாரண திறனுடையவர்களுக்கான விசா (Extraordinary Ability Visa) எனப்படுகிறது.

ஜெ1 விசா என்பது வந்து போவோர் பரிமாற்ற விசா (Exchange Visitors Visa) எனப்படுகிறது.

ஹெச்1பி விசா என்பது தற்காலிகமாகப் பணியாற்றுவோருக்கான விசா (Temporary Work Visa) எனப்படுகிறது. தற்போது இந்த விசாவுக்கான அனுமதியைத்தான் கடினமாக்கி கட்டணத்தை ஒரு லட்சம் டாலர் என்று உயர்த்தியிருக்கிறது அமெரிக்கா.

இப்படி ஹெச்1பி விசாவில்அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டினர்களின் வரிசையில் இந்தியா மூன்றாமிடத்தில் இருக்கிறது. அந்த எண்ணிக்கை விவரம் வருமாறு, மெக்சிகோவினர் 10.7 மில்லியன் என்ற எண்ணிக்கையிலும், சீனாவினர் 5.5 மில்லியன் என்ற எண்ணிக்கையிலும், இந்தியர் 5.2 மில்லியன் என்ற எண்ணிக்கையிலும் உள்ளனர்.

*****

Friday, 12 December 2025

ஸ்பைடர்மேனின் பிறப்பும் புதிய ரத்த வகையும் இ20 பெட்ரோலும்!

ஸ்பைடர் மேனின் பிறப்பு

சிலந்தி மனிதன் (ஸ்பைடர் மேன்) படக்கதைகளைப் (காமிக்ஸ்) படித்து வியக்காதவர்கள் இருக்க முடியாது. படித்து வியந்தவர்கள் திரையில் பார்த்து ரசிக்காமலும் இருக்க முடியாது.

ஸ்பைடர் மேன் காமிக்ஸ் முதன் முதலில் வெளியானது 1962, ஆகஸ்ட் 1 இல் அமேசிங் பேன்டசி என்ற காமிக்ஸ் புத்தகத்தில். கிட்டதட்ட 63 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் பொலிவு குன்றாமல்தான் இருக்கிறார் இந்தச் சிலந்திப் பூச்சி மனிதர்.

*****

புதிய ரத்த வகை

நமக்கு ஏ, பி, ஏபி, ஓ இவற்றில் +, - என சில ரத்த வகைகளைத் தெரியும். இதைத் தாண்டிய புதிய ரத்த வகைகளும் இருக்கின்றன. அண்மையில் கர்நாடகம், கோலாரில் CRIB (Cromer India Bengaluru) என்ற புதிய ரத்த வகை 38 வயது பெண்மணியிடம் கண்டறியப்பட்டுள்ளது. வினைபுரியும் நிலையில் உள்ள ரத்த சிவப்பணுக்கள் இவ்வகை ரத்தத்தின் சிறப்பம்சமாகும்.

*****

இ20 பெட்ரோல்

ஒரு சில இரு சக்கர வாகனத்தில் E20 Compliance என்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அப்படியென்றால் என்ன?

20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் என்பதுதான் அதன் பொருள்.

எத்தனால் என்பது பெட்ரோலைப் போலக் கிடையாது. குறைவான கார்பனையே உமிழும். மேலும் எத்தனால் வெளியிடும் கார்பன் – டை – ஆக்சைடைத் தாவரங்கள் உள்வாங்கிக் கொள்ளும். இதெல்லாம் பெட்ரோலில் சாத்தியப்படாது.

பெட்ரோலை நாம் இறக்குமதி செய்ய வேண்டும். எத்தனாலை நாம் கரும்புச்சாறு, மக்காச்சோளம் மற்றும் வீணாகும் தானியங்களிலிருந்து தயாரித்துக் கொள்ள முடியும். இதனால் இறக்குமதி குறையும், விவசாயமும் பலன் பெறும், பலம் பெறும்.

ஒரு கணக்கின்படி 20 சதவீத எத்தனாலைப் பெட்ரோலோடு கலப்பதால் நமக்கு 1.1 லட்சம் கோடி அந்நிய செலவாணி மிச்சமாகும். இதனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அத்துடன் முன்பே குறிப்பிட்டது போலச் சுற்றுச்சூழலுக்கும் இணக்கமாக உள்ளது. விவசாயம் செழிக்கவும் வாய்ப்புள்ளது.

பெட்ரோல் விலையைக் குறைக்கவும் வாய்ப்புள்ளதா? ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் குறைக்குமா என்பது விடை காண முடியாத கேள்வி.

*****